கோஹ்லியுடனான பனிப்போரை உறுதி செய்யும் வகையில் ரோஹித் செய்த காரியம்!

Report Print Kabilan in கிரிக்கெட்
559Shares

இந்திய கிரிக்கெட் அணியில் கோஹ்லி-ரோஹித் இருவருக்கும் இடையேயான பனிப்போர் தீவிரமடைந்துள்ளது.

ஆசிய கோப்பையில் கோஹ்லி விளையாடாதபோது, ரோஹித் ஷர்மா அணித்தலைவராக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்தார். அதற்கு முன்பு நடந்த நிதாஹஸ் டிராபி டி20 தொடரையும் வென்று கொடுத்தார்.

அதன் பின்னர் அளித்த பேட்டியில், அணித்தலைவராக செயல்பட தயார் என்று அதிரடியாக பேட்டி கொடுத்தார். அப்போதே ரோஹித்துக்கும், கோஹ்லிக்கு இடையே பனிப்போர் நடந்து வருவது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு பின்னர் மீண்டும் கோஹ்லி-ரோஹித் மோதல் குறித்த விவாதம் எழுந்தது. கோஹ்லிக்கு ஆதரவாக சில வீரர்களும், ரோஹித்துக்கு ஆதரவாக சில வீரர்களும் இருப்பதாக செய்திகள் வெளியாகின. அத்துடன் ரோஹித் ஷர்மாவை அணித்தலைவராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்தன.

AFP

இந்நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்கு கோஹ்லி அணித்தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கோஹ்லி-ரோஹித் இடையேயான பனிப்போர் குறையவில்லை. அதன் வெளிப்பாடாக அமைந்துள்ளது ரோஹித் ஷர்மாவின் செயல்.

இன்ஸ்டாகிராமில் கோஹ்லி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவை, ரோஹித் பின் தொடர்ந்து வந்தார். ஆனால் தற்போது கோஹ்லியை Unfollow செய்துள்ளார் ரோஹித். அத்துடன் அனுஷ்கா ஷர்மாவையும் அவர் Unfollow செய்துள்ளார். ரோஹித்தின் இந்த செயல்பாடு, கோஹ்லியுடனான பனிப்போரை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

இதற்கிடையில், அனுஷ்கா ஷர்மா தனது ஸ்டேட்டஸில் ‘பொய்யான தோற்றங்களுக்கு மத்தியில் உண்மை அமைதியுடன் தான் செயல்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனை வைத்து ரோஹித்தின் ரசிகர்களும், கோஹ்லியின் ரசிகர்களும் மோத தொடங்கிவிட்டனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்