27 வயதில் திடீர் ஓய்வு முடிவை அறிவித்த பாகிஸ்தான் வீரர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அணியில் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமானார் முகமது ஆமிர் (27). தனது அபார பந்துவீச்சினால் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக உருவெடுத்தார்.

சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வகையான சர்வதேச போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆமிர், தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாகிஸ்தானுக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நான் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன்.

அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்க உள்ளன. எனவே, இதற்கு பாகிஸ்தான் அணி பல நல்ல இளம் வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக நான் முடிவு எடுத்துள்ளேன். ஆகவே, நான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

முகமது ஆமிர் இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் 119 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் 5 விக்கெட்டுகளை நான்கு முறை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 6/44 ஆகும்.

அதேபோல் 59 ஒருநாள் போட்டிகளில் 77 விக்கெட்டுகளும், 42 டி20 போட்டிளில் 55 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers