இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இவர் தான்! வெளியானது அறிவிப்பு

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமிப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சமீபகால செயல்பாடுகள் மோசமாக இருந்தது.

அதிலும் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அந்த அணி அரையுறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது.

இதையடுத்து அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திகா ஹதுருசின்கா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமிப்பட்டுள்ளார்.

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள நிலையிலேயே ருமேஸ்க்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளராக ருமேஸ் ரத்நாயக்க சிறப்பாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்