தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் நீக்கம்! புதிய பயிற்சியாளர்கள் தெரிவு

Report Print Kabilan in கிரிக்கெட்
122Shares

இந்திய ஏ கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதுகுட்பட்டோருக்கான தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட், இந்திய ஏ மற்றும் U19 அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் தான் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக டிராவிட் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இரட்டை பதவிகளில் ஒரே சமயத்தில் வகிக்கக் கூடாது என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், ராகுல் டிராவிட் வகித்து வந்த தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக சிதான்சு கோடக்கும், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராக பராஸ் பாம்ரேயும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

AFP

இவர்கள் அடுத்த சில மாதங்களுக்கு பயிற்சியாளர் பதவியில் இருப்பார் என்று கூறப்படுகிறது. பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவாரும், பீல்டிங் பயிற்சியாளராக டி திலிப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

U19 அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள பாம்ரே, ஏற்கனவே டிராவிட்டிடம் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது அவருக்கு துணையாக இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ரிஷிகேஷ் கனிட்கரும், அபேய் ஷர்மாவும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்