இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய ரசிகர்கள்... கலக்கத்தில் கிரிக்கெட் வாரியம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது இனவெறி கோஷங்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆபாச செய்கைகள் போன்றவற்றால் கலக்கம் அடைந்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

இங்கிலாந்தின் ஓல்ட் டிராஃபோர்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஆஷஸ் போட்டியின் போது மேற்கொள்ளப்பட்ட இனவெறி கோஷங்கள் மற்றும் பார்வையாளர்களின் பாலியல் கோஷங்கள் மற்றும் ஆபாச செய்கைகள் போன்ற குற்றச்சாட்டுகளால் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) மிகவும் கலக்கமடைந்துள்ளது.

இங்கிலாந்தின் பார்படோஸில் பிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரைப் பற்றி ரசிகர்களில் ஒரு பகுதியினர் இனவெறிப் பாடலைப் பாடியதைக் கேட்டு கடந்த வியாழக்கிழமை நடந்த போட்டியின் இரண்டாவது நாளில் ஒரு ஆதரவாளர் மைதானத்தில் இருந்து வெளியேறியதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

பார்வையாளர் ஒருவர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு எழுதி உள்ள கடிதத்தில், பெண்கள் பாலியல் கோஷங்களுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதே நேரத்தில் ஒரே குழுவினர் சில வீரர்களை நோக்கி ஆபாச செய்கைகளை செய்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றாலும், விளையாட்டிற்குள் சமூக விரோத நடத்தைக்கு முற்றிலும் இடமில்லை,

மேலும் அனைத்து பார்வையாளர்களும் சமூக விரோத நடத்தைகளை புகாரளிக்க முடியும் என்பதையும், அவ்வாறு செய்வதில் பாதுகாப்பாக இருப்பதையும் உணர வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...