பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்களுக்கு அபராதம்.. முன்னாள் அணித்தலைவர் காட்டம்

Report Print Basu in கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டாம், தாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் ஜாவேத் மியாண்டாத் அறிவுறுத்தியுள்ளார்,

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி செப்டம்பர் 27ம் திகதி தொடங்கவுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு காரணம் காட்டி மலிங்கா உட்பட மூத்த இலங்கை வீரர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் தொடருக்கு மூத்த வீரர்கள் அல்லாத அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் ஜாவேத் மியாண்டாத், எந்த இலங்கை வீரர்கள் வருகை தருகிறார்கள் என்பது முக்கியமல்ல, வரும் அணியின் தரத்தைப் பொருட்படுத்தாமல் பாகிஸ்தான் அவர்களின் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

இதற்கிடையில்,தேசிய அணிக்கு விளையாடாமல் வெளிநாட்டு டி-20 லீக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த வீரர்கள் மீது இலங்கை கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேச போட்டிகளுக்கு வீரர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும், பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகியவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அபராதம் விதிக்க வேண்டும் என்று 62 வயதான ஜாவேத் மியாண்டாத் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்