இலங்கை-இந்தியா டி20 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை-இந்தியா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இந்நிலையில், ஜனவரி மாதம் நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாட இருந்தது. ஆனால், ஜிம்பாப்வேயின் சர்வதேச அங்கீகாரத்தை ஐ.சி.சி தற்காலிகமாக ரத்து செய்தது.

இதனால் அந்த அணிக்கு எதிரான தொடரை ரத்து செய்த இந்திய அணி, அதற்கு பதிலாக இலங்கை அணியுடன் விளையாட அழைப்பு விடுத்தது. அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததில், இந்தியா வந்து விளையாட இலங்கை அணி சம்மதம் தெரிவித்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் டி20 போட்டி கவுகாத்தியில் ஜனவரி 5ஆம் திகதியும், இரண்டாவது டி20 போட்டி இந்தூரில் 7ஆம் திகதியும், 3வது போட்டி புனேவில் 10ஆம் திகதியும் நடைபெற உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்