கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் சச்சினுக்கு இணையான சாதனை... புதிய உச்சம்

Report Print Abisha in கிரிக்கெட்

மகளிர் கிரிக்கெட்டில் இந்திய மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் புதிய மைல்கல்லை எட்டி வியக்க வைத்துள்ளார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் ஆடி, மகளிர் கிரிக்கெட்டில் யாரும் தொடாத உயரத்தை தொட்டுள்ளார் மிதாலி ராஜ். கிட்டத்தட்ட மகளிர் கிரிக்கெட்டில் சச்சினுக்கு இணையான சாதனை என்று கூறப்படுகின்றது.

மிதாலி ராஜ் ஜூன் 1999இல் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனவர். அப்போது முதல் கிரிக்கெட் ஆடி வரும் அவர் 20 ஆண்டுகளை கடந்து மகளிர் கிரிக்கெட்டில் உச்சத்தை தொட்டுள்ளார்.

ஆடவர் கிரிக்கெட்டில் சச்சின் 22 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடி முதல் இடத்தில் இருப்பது போலவே, மகளிர் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் 20 ஆண்டுகளுக்கும் மேல் கிரிக்கெட் ஆடி முதல் இடத்தில் இருக்கிறார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தான் இந்த மைல்கல் சாதனையை பதிவு செய்துள்ளார் மிதாலி ராஜ். இந்தப் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

இதை ஆடவர் கிரிக்கெட்டையும் சேர்த்து கணக்கிட்டால், மிதாலி ராஜ் நான்காவது இடத்தில் இருக்கிறார். சச்சின் (22 ஆண்டுகள், 91 நாட்கள்), சனத் ஜெயசூர்யா (21 ஆண்டுகள் 184 நாட்கள்), ஜாவேத் மியான்தத் (20 ஆண்டுகள் 272 நாட்கள்) கிரிக்கெட் ஆடி முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

அதே போல, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த சாதனையும் மிதாலி ராஜ் வசம் தான் உள்ளது. 204 போட்டிகளில் 6,731 ரன்கள் குவித்துள்ளார் அவர். 16 வயதில் தன் முதல் சதம் அடித்த மிதாலியின் சாதனை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்