இந்தியா-வங்கதேசம் மோதும் 2வது டி-20 போட்டி நடப்பதில் சிக்கல்

Report Print Basu in கிரிக்கெட்

மகா புயல் காரணமாக இந்தியா-வங்கதேசம் மோதும் 2வது டி-20 கிரிக்கெட் போட்டி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 டி-20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

முன்னதாக, டெல்லியில் நடந்த முடிவில் டி-20 போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான 7 இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற வெற்றி கணக்கில் டி-20 தொடரில் வங்கதேச அணி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், நாளை நவம்பர் 7ம் திகதி மாலை 7 மணிக்கு குஜராத் மாநிலம் ராஜகோட்டு மைதானத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி நடைபெறவுள்ளது.

2வது டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தோல்வியடைந்தால் வரலாற்றில் முதன் முறையாக இந்திய மண்ணில் டி-20 தொடரை கைப்பற்றி வங்கதேச வரலாறு படைக்கும்.

இதுஒரு புறம் இருக்க மகா புயல் ராஜஸ்தானில் இன்று நவம்பர் 6ம் திகதி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனினும், வியாழக்கிழமை நவம்பர் 7ம் திகதி காற்றின் வேகம் குறையும், போட்டிக்கு நடப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்