டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைக்க போகும் ரோகித் ஷர்மா! கோஹ்லியை முந்தி அசத்தல்

Report Print Raju Raju in கிரிக்கெட்

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணித்தலைவர் ரோகித் ஷர்மா 100 டி-20 போட்டிகளில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைக்கவுள்ளார்.

இந்தியா வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி முதலில் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் வங்கதேச அணி, இந்திய அணியை வீழ்த்தியது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது

இது இந்திய அணித்தலைவர் ரோகித் ஷர்மா பங்கேற்கும் 100வது சர்வதேச டி-20 போட்டியாகும். இதன் மூலம் 100 டி-20 போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெறவுள்ளார் ரோகித்.

தவிர, பாகிஸ்தானின் சோயிப் மாலிக்கிற்கு (111 போட்டிகள்) பின், சர்வதேச அளவில் இம்மைல்கல்லை எட்டும் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெறவுள்ளார்.

டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில், ரோகித் ஷர்மா, சர்வதேச டி-20 அரங்கில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோஹ்லியை பின்னுக்கு தள்ளி நம்பர்-1 இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்