ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணியில் என்ன மாற்றம் செய்யப்படும்? வெளியான எதிர்பார்க்காத பதில்

Report Print Raju Raju in கிரிக்கெட்

2020ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்த மாற்றமும் உள்ளதா என கேள்வி கேட்ட ரசிகருக்கு அணி நிர்வாகம் வித்தியாசமான பதிலை அளித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலம், வரும் டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடக்கிறது.

ஐபிஎல் போட்டியில் பல அணிகள் இருந்தாலும் டோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் ஒருவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் டேக் செய்து, சென்னை அணியில் எந்த மாற்றமும் உள்ளதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த சென்னை அணி நிர்வாகம், ஆம், டாடி ஆர்மிக்கு ஒரு வயது கூடியுள்ளது என கிண்டலாக குறிப்பிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளிலேயே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் அதிக சீனியர்கள் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதை குறிப்பிடும் விதமாக டாடி ஆர்மி என சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்லப்பெயர் வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்