ஸ்டம்பையே பார்க்காமல் அசத்தல் ஸ்டம்பிங்... மிரண்டு போய் நின்ற துடுப்பாட்டகாரர்! பாராட்டு மழையில் இளம் வீரர்

Report Print Basu in கிரிக்கெட்

நியூசிலாந்து 19 வயதிற்கு உட்பட்டோர் அணிக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே வீரர் அற்புதமாக செய்த ஸ்டம்பிங்கை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

நியூசிலாந்து 19 வயதிற்கு உட்பட்டோருக்கு எதிரான ஆட்டத்தில். பெக்காம் வீலர்-க்ரீனால் நியூசிலாந்திற்காக துடுப்பாட, ஜிம்பாப்வே இடது கை சுழற்பந்து வீச்சாளர் ததிவானாஷே நயங்கனி பந்து வீசினார்.

வீலர்-க்ரீனால் முன்னாள் சென்று பந்தை தூக்கி எறிய முயன்றார், ஆனால் பந்தை முழுவதுமாக தவறவிட்டார்.

ஆனால் 17 வயதான ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் டேன் ஷேடென்டோர்ஃப், விரைவாக இடது பக்கம் நகர்ந்து பந்தைப் பிடித்து, உடனே திரும்பிய படியே பந்தை ஸ்டம்ப் மீது வீசி அசத்தலாக அவுட்டாக்கினார்.

ஷேடென்டோர்ஃப்பின் ஸ்டம்பிங்க விதம் டோனியை போல் இருந்ததாக பலர் பாராட்டி வருகின்றனர்.

குறித்த போட்டியில் நியூசிலாந்து அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணி வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்