கொரோனாவால் கிரிக்கெட் போட்டிகள் ரத்து! வித்தியாசமாக பொழுதை கழிக்கும் இந்திய அணி வீரரின் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

கொரோனா அச்சத்தால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர் வித்தியாசமாக பொழுதை கழிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகெங்கும் கோரத்தாண்டவம் நிகழ்த்தி வருவதால் உலகத்தில் விளையாட்டுப் போட்டிகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் விளையாட்டு வீரர்கள் வீடுகளில் தங்களுக்கேயுரிய வகையில் பொழுதைப் போக்கி வருகின்றனர்.

இந்த சூழலில் மும்பையைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் அய்யர் வீட்டில் சிலபல மேஜிக் விளையாட்டுகளில் நிபுணத்துவம் பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக பிசிசிஐ சனிக்கிழமையன்று 91 விநாடி கால அளவு கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளது, இதில் அய்யர் தன் சகோதரி நடாஷாவுடன் சீட்டுக்கட்டு மேஜிக்கில் ஈடுபட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மெஜீஷியன் ஷ்ரேயஸ் அய்யர் நாம் வீட்டில் அடைந்து கிடக்கும் வேளையில் நம்மை கேளிக்கைக்கு இட்டுச் செல்கிறார், புன்னகையை கொண்டு வந்ததற்கு நன்றி சாம்பியன் என்று பிசிசிஐ வாசகத்துடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்