கொரோனாவுக்காக மொட்டை அடித்துக்கொண்ட பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.. கோஹ்லிக்கும் சவால்!

Report Print Basu in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய நட்சத்திர துடுப்பாட்டகாரர் டேவிட் வார்னர், தான் மொட்டை அடித்துக்கொண்ட வீடியோ தனது சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கொரோனாவுக்கு 19 பேர் பலியாகியுள்ள நிலையில், 4,557 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக முன்னணி வரிசையில் பணிபுரிபவர்களுக்கு ஆதரவாக என் தலையை மொட்டையடிக்க பரிந்துரைக்கப்பட்டது.

கடைசியாக நான் அறிமுகமான போது இதைச் செய்ததை நினைவு கூர்ந்தேன். பிடித்திருக்கா இல்லையா?. என வார்னர் வீடியோவுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டள்ளார்.

தலையை மொட்டையடித்த பிறகு, வார்னர் தனது அவுஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி ஆகியோருக்கும் இதைச் செய்ய சவால் விடுத்தார்.

சமீபத்தில் தனிமைப்படுத்துதலின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகை அனுஷ்க சர்மா தனது கணவர் கோஹ்லிக்கு முடிவெட்டும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்