உங்கள் நாட்டுக்கு ஏதேனும் முதலில் செய்யுங்கள்! ஓட்டுமில்லை உறவுமில்லை - ஹர்பஜன், சுரேஷ் ரைனா காட்டமான பதில்

Report Print Abisha in கிரிக்கெட்

உன் தோல்வியடைந்த நாட்டுக்கு உருப்படியாய் ஏதாவது செய் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியை இந்திய அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் உள்ளிட்ட பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியின் அறக்கட்டளைக்கு நிதியுதவி செய்தனர். இந்நிலையில் பாகிஸ்தானில் பொது இடத்தில் அப்ரிடி காஷ்மீர் தொடர்பாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த வீடியோ வெளியாகி வைரலானது. இதனையடுத்து இந்திய வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஹர்பஜன் சிங் "இந்தியா குறித்தும், நம் பிரதமர் குறித்தும் ஷாகித் அப்ரிடி பேசியது வருத்தம் அளிக்கிறது. அதோடு அதை சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்ரிடி தனது அறக்கட்டளைக்காக உதவும் படி கேட்டுக்கொண்டார். மனிதாபிமன அடிப்படையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தவிப்பவர்களுக்காக தான் நாங்கள் உதவினோம். நம் பிரதமர் கூட எல்லைகள் கடந்து உதவுங்கள் என்று தெரிவித்திருந்தார். அதற்காக தான் நாங்கள் அவருக்கு உதவினோம். ஆனால் அந்த மனிதர் தற்போது நாட்டுக்கு எதிராக பேசியுள்ளார். இனி அவருடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை. நம் நாட்டைப்பற்றி அவதூராக பேச அவருக்கு எந்த அருகதையும் இல்லை" என சாடியுள்ளார்.

இது குறித்து சி.எஸ்.கே அணியின் சின்ன தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா “ என்ன மாதிரியான ஆட்கள் இவர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் முதலில் உங்கள் தோல்வியடைந்த நாட்டுக்கு ஏதேனும் செய்யுங்கள். காஷ்மீரை விட்டுவிடுங்கள். நான் காஷ்மீரை கொண்டுள்ளதற்கு பெருமைபடுகிறேன். அது இந்தியாவின் தவிர்க்க முடியாத பகுதிதான். ஜெய் ஹிந்த்” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்