எட்டு உலகக் கிண்ணம் போட்டிகளில் விளையாடிய இலங்கை வீராங்கனை ஓய்வு

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

எட்டு உலகக் கிண்ணம் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரீபாலி வீரக்கொடி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

2006 முதல் இலங்கை அணிக்காக விளையாடி வந்த 34 வயது வீரக்கொடி, கடைசியாக 2018-ல் விளையாடினார்.

2009, 2013, 2017 ஒருநாள் உலகக் கிண்ணம் போட்டிகளிலும் 2009, 2010, 2012, 2014, 2018 டி20 உலகக் கிண்ணம் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் வீரக்கொடி.

2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணி வெண்கலம் வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார்.

இலங்கை அணிக்காக 89 ஒருநாள், 58 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஓய்வுக்குப் பிறகு, ஃபிட்னஸ் பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்