இறுதிப்போட்டியில் ஜூக்ஸ் அணியை பந்தாடி.. 4வது முறை சாம்பியனாக முடிசூடியது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்

Report Print Basu in கிரிக்கெட்

கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) 2020 தொடரின் இறுதிப்போட்டியில் டேரன் சமி தலைமையிலான செயின்ட் லூசியா ஜூக்ஸ் அணியை வீழ்த்தி கீரோன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடந்த சிபிஎல் 2020 தொடரின் இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டிரின்பாகோ அணி முதல் பந்து வீச முடிசெய்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய செயின்ட் லூசியா ஜூக்ஸ் அணி 19வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்கள் எடுத்தது.

ஜூக்ஸ் அணியில் அதிகபட்சமாக பிளெட்சர் 39 ஓட்டங்கள் எடுத்தார், டிரின்பாகோ அணி தரப்பில் பொல்லார்ட் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

155 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, 18வது ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

டிரின்பாகோ அணியின் ஆரம்ப துடுப்பாட்டகாரர் சிம்மன்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்கள் குவித்தார்.

சிபிஎல் 2020 தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 12 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோல்வியடைவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 4வது முறையாக சிபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்