ரெய்னா இடத்தில் அவர் விளையாட வேண்டும்: முன்னாள் சென்னை அணி வீரர்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

சி.எஸ்.கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பியுள்ள நிலையில் அவரது இடத்தில் யார் விளையாடுவார்கள் என்ற விவாதம் தற்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் ரெய்னா இடத்தில் ராயுடு விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார் நியூசிலாந்து மற்றும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ்.

அந்த இடத்தில் அம்பாதி ராயுடுவை விளையாட செய்வது தான் சரியாக இருக்கும் என நான் நினைக்கிறன்.

ரெய்னா சி.எஸ்.கே அணியில் இல்லாதது துடுப்பாட்ட வரிசையில் கொஞ்சம் பின்னடைவு தான்.

இருந்தாலும் ராயுடு மூன்றாவது வீரராக இறங்கி விளையாடும் திறன் கொண்டிருப்பவர். 2018இல் சி.எஸ்.கே அணிக்காக அவர் ஆடிய ஆட்டமே அதற்கு சான்று என தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் அவர்.

அதே நேரத்தில் அனுபவ வீரர் ஹர்பஜன் இல்லாதது பந்து வீச்சில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்