பூரன் வெறிதனமாக வீசிய த்ரோ: ஹெல்மட்டில் பலமாக தாக்கிய பந்து.. மைதானத்திலே சுருண்ட விஜய் சங்கர்

Report Print Basu in கிரிக்கெட்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் வீரர் விஜய் சங்கர் ஹெல்மட்டில் பந்து பலமாக தாக்கி அவர் மைதானத்திலே சுருண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

துபாயில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வீழ்த்தியது.

போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் 18வது ஓவரை பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் சிங் வீச, பந்தை அருகிலேயே அடித்த ஜேசன் ஹோல்டர் ரன் ஓடினார்.

எதிரே இருந்த மற்றொரு ஐதராபாத் பேட்ஸ்மேன் விஜய் சங்கர் ஓடி வர, பந்தை எடுத்த பஞ்சாப் வீரர் பூரன் ஸ்டம்பை நேக்கி வெறிதனமாக வீசினார்.

ஆனால், ஸ்டம்பை தவறவிட்ட பந்து நேராக ஓடி வந்த சங்கரின் ஹெல்மட் மீது பலமாக தாக்கியது.

இதனையடுத்து, சங்கர் மைதானத்தில் சுருண்டார், பின் விரைந்த வந்த மருத்துவ குழுவினர் அவரை சோதனை செய்தனர்.

எனினும், விஜய சங்கர் தொடர்ந்து வினையாட முடிவு செய்தார், ஆனால் அடுத்த பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார்.

அடுத்துடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிய ஐதராபாத் அணி வெற்றிப்பெற வேண்டிய போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்