இங்கிலாந்தில் 56 ஆண்டுகளாக வாழ்கிறேன்! அந்த அணி கிரிக்கெட் வாரியத்தில் இனவெறி உள்ளது.. மனம் திறந்த ஜாம்பவான்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் பல ஆண்டுகளாக இனவெறி கலாச்சாரம் இருப்பதாக ஜாம்பவான் ஜான் ஹோல்டர் கூறியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹோல்டர், கடந்த 30 ஆண்டுகளில் 11 டெஸ்ட் மற்றும் 19 ஒருநாள் போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், இங்கிலாந்தில் 56 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். நான் நேரடியாக எந்தவொரு இனவெறி நடவடிக்கைகளுக்கும் ஆளானதில்லை.

ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நியமனங்களை ஊடுருவிப் பார்த்தால் அதில் நீண்டகாலமாக இனவெறி கலாசாரம் இருந்தது தெரியவரும்.

நான் ஐசிசி-க்காக பணியாற்றுவதை நிறுத்திக் கொண்ட பிறகு இங்கிலாந்து கிரிக்கெட்டில் பணியாற்ற வாரியத்தை தொடர்புகொண்டேன். ஆனால் அவர்களிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக நடுவராக அனுபவம் இல்லாத முன்னாள் வீரர்கள் பலருக்கு வாய்ப்பளித்தார்கள். இது நகைப்புக்குரியது.

இறுதியாக கடந்த 1992-இல் வெள்ளையினத்தைச் சாராத வான்பர்ன் ஹோல்டர் முதல்தர கிரிக்கெட்டுக்கான நடுவராக நியமிக்கப்பட்டார்.

அதன் பிறகு வெள்ளையினத்தைச் சாராத வேறு எவருமே அந்த கிரிக்கெட்டில் நடுவராக நியமிக்கப்பட்டதில்லை. சிறந்த கிரிக்கெட் வீரரான டிவோன் மால்கம்முக்கே அதில் வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் எனக்கு எவ்வாறு வாய்ப்பு கிடைக்கும்?

வெள்ளையினத்தவர்களையே முதல்தர கிரிக்கெட்டுக்கான நடுவராக நியமிக்க வேண்டும் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுவதாக சந்தேகிக்கிறேன். இதுகுறித்து சுந்திர அமைப்பு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்