அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய இந்திய நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல், தனக்கு இது மிகவும் ஏமாற்றமாக மற்றும் வருத்தமாக இருப்பதாக வேதனையை வெளியிப்படுத்தியுள்ளார்.
கே.எல்.ராகுலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்காத இந்திய அணி நிர்வாகம், சிட்னியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சனிக்கிழமையன்று மெல்போர்னில் நடந்த இந்திய அணிப் பயிற்சியின் போது கே.எல்.ராகுலுக்கு இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர் விலகினார்.
அணியிலிருந்து விலகியது தனக்கு மிகவும் ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருப்பதாக கே.எல்.ராகுல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆனால், மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என அவர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
Gutted to be leaving the team, but wishing the boys all the luck for the remaining two Tests 🇮🇳💪
— K L Rahul (@klrahul11) January 6, 2021
தொடரிலிருந்து விலகிய ராகுல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்குத் திரும்பவுள்ளார். இவர் காயத்திலிருந்து மீள 3 வாரங்கள் ஆகும். எனவே இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர் பங்கேற்பது கடினம் என்று தெரிகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான தொடர் பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.