அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 100 சிக்சர்கள்! புதிய வரலாற்று சாதனை படைத்த ரோகித் சர்மா

Report Print Raju Raju in கிரிக்கெட்
236Shares

ஆவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 100 சிக்சர்கள் அடித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் சர்மா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது.

இதில் 16வது ஓவரில் லயன் வீசிய பந்தில் ரோகித் சர்மா அடித்த சிக்சர் அவருக்கு வரலாறு படைக்க உதவியது.

சர்வதேச போட்டிகளில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அனைத்து நிலைகளிலும் சேர்த்து 100 சிக்சர்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

அவர் ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 63 சிக்சர்கள் விளாசியுள்ளார். இதுவே, 5 முறை உலக சாம்பியனான அவுதிரேலியாவுக்கு எதிராக ஒரு வீரர் அடித்த அதிக சிக்சர்கள் ஆகும்.

இதுதவிர வேறு சில வரலாற்று சாதனைகளையும் ரோகித் படைத்துள்ளார். அவர் இன்று அடித்த சிக்சரால், மொத்த சிக்சர் எண்ணிக்கை 424 ஆக உயர்ந்து உள்ளது. கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார்.

அவரது இந்த சிக்சருக்கு பின்னர், கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் வரிசையில் 3வது இடத்தில் உள்ளார்.

வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (534), பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி (476) ஆகியோர் ரோகித்துக்கு முன்னாள் அடுத்தடுத்து உள்ளனர்.

எனினும், ஒற்றை அணிக்கு எதிராக அனைத்து நிலைகளிலும் சேர்த்து 100 சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் ரோகித் முதல் இடத்தில் இல்லை. ஏனெனில், இங்கிலாந்து அணிக்கு எதிராக கெய்ல் அனைத்து நிலைகளிலும் சேர்த்து 140 சிக்சர்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்