தொடர்ந்து 8 நோ-பால்... நடராஜன் மீது சந்தேகத்தை கிளப்பிய வார்னே

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
853Shares

இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜன் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் நோ-பால் வீசியதை ஸ்பாட் பிக்சிங்குடன் தொடர்புபடுத்தி அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார்.

பிரிஸ்பேனில் தற்போது இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

பிரிஸ்பேன் டெஸ்ட்டில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் நடராஜன் 6 நோ-பால்களை வீசினார். 2 நோபால்களை 4-வது நாள் ஆட்டத்தில் வீசினார்.

8 நோ-பால்களில் ஐந்து முறை அவர் வீசிய ஓவரின் முதல் பந்து நோ-பாலாக அமைந்தது. இதைப்பார்த்த வர்ணனையாளர் பிரிவில் இருந்த ஷேன் வார்னே, டி நடராஜன் வீசிய நோ-பால்கள் சந்தேகத்தை எழுப்புகிறது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நடராஜன் பந்து வீசும்போது என் கண்களுக்கு ஏதோ வித்தியாசமாகத் தெரிகிறது.

நடராஜன் 8 நோ-பால்களை வீசியுள்ளார். அனைத்து நோ-பால்களுமே மிகப்பெரியவை. அதில் 5 நோ-பால்கள் ஓவரின் முதல் பந்திலேயே வீசப்பட்டுள்ளது.

நாமெல்லாம் நோ-பால் வீசியிருக்கிறோம். ஆனால், ஓவரின் முதல் பந்திலேயே 5 நோ-பால்கள் வீசியதுதான் வித்தியாசமாக, சுவாரஸ்யமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார் ஷேன் வார்னே.

ஷேன் வார்னின் இந்த சந்தேகத்திற்கு சமூக ஊடகங்களில் இந்திய அணி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்