அந்த இரண்டு தமிழக வீரர்களும் அணிக்கு நிச்சயம் வேண்டும்! இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் திட்டவட்டம்

Report Print Santhan in கிரிக்கெட்
676Shares

இங்கிலாந்து அணி கேப்டன் ஆன, தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் வருண் சக்ரவர்த்தி அணியில் நிச்சயம் தேவை என்று ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இந்தியாவில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.

இதனால் தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்படும் வீரர்களுக்கான கடைசி நாள் நேற்று என்பதால், அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

அதன் படி கொல்கத்தா அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நிச்சயம் விடுவிக்கப்படுவார் என்று செய்தி வெளியானது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தினேஷ் கார்த்திக் மற்றும் வருண் சக்ரவர்த்தியை விடுவிக்கம் திட்டம் இல்லை என்பதை கொல்கத்தா அணி சொல்லாமல் நேற்று சொல்லிவிட்டது.

கொல்கத்தா அணியில் இருந்து, டாம் பான்டன், கிறிஸ் கிரீன், நிகில் நாயக், சித்தார்த் எம், சித்தேஷ் லாட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

தினேஷ் கார்த்திக் மற்றும் வருண் சக்ரவர்த்தி அணியில் நீடிப்பதற்கு, அந்தணியின் கேப்டனும், இங்கிலாந்து அணியின் கேப்டனுமான இயான் மோர்கன் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இயான் மோர்கன் இவர்கள் இரண்டு பேரும் அணியில் இருக்கும் முக்கியமான வீரர்கள், இவர்களை வெளியேற்றக் கூடாது என்று இயான் மோர்கன் கொல்கத்தா அணி நிர்வாகத்திடம் திட்டவட்டமாக கூறிவிடவே, இவர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி இயான் மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே ஒரு நல்ல நட்பு இருப்பதை கடந்த ஐபிஎல் தொடரில் பார்க்க முடிந்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்