100 டெஸ்டுகளில் விளையாடும் கடைசி இந்திய வேகப்பந்து வீச்சாளர்!

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
0Shares

100 டெஸ்டுகளில் விளையாடும் கடைசி இந்திய வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் சர்மா இருப்பார் என இந்திய முன்னாள் விக்கெட் கீப்பரும் டெல்லி முன்னாள் வீரருமான விஜய் தாஹியா கூறியுள்ளார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது 100-வது டெஸ்டை விளையாடவுள்ளார். இதுவரை 99 டெஸ்டுகளில் விளையாடியுள்ள 32 வயது இஷாந்த் சர்மா, 302 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

80 ஒருநாள், 14 டி20 ஆட்டங்களிலும் அவர் விளையாடியுள்ளார். 19 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானதால் அவரால் 32 வயதுக்குள் 100 டெஸ்டுகளில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட்டில் கபில் தேவ் மட்டுமே 100 டெஸ்டுகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்.

அந்தப் பெருமை இஷாந்த் சர்மாவுக்கு புதன்கிழமை தொடங்கும் இந்தியா- இங்கிகாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் மூன்றாவது டெஸ்டில் கிடைக்கவுள்ளது.

எனினும் இதன்பிறகு வேறு எந்த இந்திய வேகப்பந்து வீச்சாளராலும் 100 டெஸ்டுகளில் விளையாடுவது கடினம் என்கிறார் டெல்லி முன்னாள் வீரரான விஜய் தாஹியா.

பெரும்பாலான வேகப்பந்து வீச்சாளர்கள் ஐபிஎல் மற்றும் வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட தங்கள் சக்தியைச் செலவிடுவதால் இந்திய அணிக்காக அவர்கள் 100 டெஸ்டுகளில் விளையாடுவது கடினம்.

தன்னுடைய அணித் தலைவருக்கு என்ன தேவையோ அதை வழங்கியதால் தான் இஷாந்த் சர்மாவால் இவ்வளவு காலம் விளையாட முடிந்தது.

ஓட்டங்களைக் கட்டுப்படுத்தும் பந்துவீச்சாளராக இஷாந்த் சர்மாவை டோனி பயன்படுத்தினார்.

சுழற்பந்து வீச்சாளர்களைப் போல ஒருநாளைக்கு 20 ஓவர்களை வீசுவார். முதல்தர கிரிக்கெட்டை அதிகமாக விளையாடி அவர் சோர்வடையவில்லை.

உடனடியாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். மூன்று வருடங்கள் ரஞ்சி போட்டியில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர்கள் விரைவில் சோர்வடைந்து விடுவார்கள்.

வேகத்தில் சமரசம் செய்துகொள்வார்கள். இஷாந்த் சர்மாவுக்கு அந்த நிலை ஏற்படவில்லை என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் விஜய் தாஹியா.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்