திகிலூட்டும் பேய்க்கோயில்

Report Print Abhimanyu in கலாச்சாரம்

கோயில் என்பது தீயசக்தியினை விரட்டுவதாகவும், மக்களுக்கு அமைதியை அள்ளிதருவதாகவும் தான் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே..

ஆனால் பேய்களை கொண்டு உருவாக்கப்பட்ட கோயில்களை யாராவது கேள்விப்பட்டது உண்டா?

ஆனால் உலகிலேயே மிகக் கொடூரமான, திகிலூட்டும் பேய்க்கோயில் ஒன்று புத்த மதத்தினரால் வழிபடப்பட்டு வருகின்றது என்பது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகின்றது.

தாய்லாந்து நாட்டில் “சையிங் மை” என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த பேய்த்தோட்டம் கொடூரமான பேய் சிலைகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை பெரிதாக வழிபாடுகள் ஏதும் நடக்காத நிலையில் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் விழாக்களுக்கு வந்து இங்கு கொண்டாடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் இந்த இடம் வெகுவாக பிரபலமடைந்து வருகிறது.

இங்கு மிகக் கொடூரமாக, படுக்க வைத்து உடலை ரம்பத்தால் அறுப்பது, குத்திக் கொன்று குடலை வெளியே உருவி எடுத்தல், மரத்தில் ஏறித் தொங்கும் பேய்கள் போன்ற கொடூர சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும் கலாச்சாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments