செனகல் கடல் விபத்தில் இந்தாண்டு 140 புலம்பெயர்ந்த நபர்கள் உயிரிழப்பு: ஐ.நா தகவல்

Report Print Karthi in புலம்பெயர்

ஐரோப்பாவிற்கு குடியேற செனகல் கடலில் பயணித்தவர்கள் 140 பேர் உயிரிழந்த சம்பவம்தான் இந்த ஆண்டு ஏற்பட்ட கடல் விபத்துக்களில் மிக மோசமானது என்று ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

செனகல் தலைநகர் டக்கருக்கு தெற்கே 100 கி.மீ (62 மைல்) தொலைவில் உள்ள மீன்பிடி நகரமான ம்பூரை விட்டு 200 பயணிகளுடன் வெளியேறிய சில மணிநேரங்களுக்கு பின்னர் படகு தீப்பிடித்து கடலில் கவிழ்ந்தது என இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐஓஎம்) தெரிவித்துள்ளது.

செனகல் மற்றும் ஸ்பானிஷ் கடற்படைகள் மற்றும் மீனவர்கள் சுமார் 60 பேரை மீட்டனர், ஆனால் "குறைந்தது 140 பேர் நீரில் மூழ்கிவிட்டனர்" என்று ஐஓஎம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆபிரிக்காவிலிருந்து கேனரி தீவுகளுக்கு செல்லும் அபாயகரமான கடல் பாதை ஒரு காலத்தில் வறுமையிலிருந்து தப்பிக்க விரும்புவோருக்கு ஒரு முக்கிய பாதையாக இருந்தது. 2000 களின் நடுப்பகுதியில் ஸ்பெயின் ரோந்துப் பணிகளை முடுக்கிவிட்டபோது இம்மாதிரியா இடம்பெயர்வுகளின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால் சமீபகக் காலங்களாக தற்போது இந்த பாதை மீண்டும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.

தப்பிப்பிழைத்தவர்களின் தேவைகளை மதிப்பிடுவதற்கும் உடனடி மனோ-சமூக உதவிகளை வழங்குவதற்கும் செனகல் அரசாங்கமும் ஐ.ஓ.எம் செயிண்ட் லூயிஸுக்கு பயணிக்க ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

மேற்கு ஆபிரிக்காவிலிருந்து கேனரி தீவுகளுக்கு புறப்படும் எண்ணிக்கை சமீபத்திய வாரங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது, 14 படகுகள் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 663 புலம்பெயர்ந்தோர் ஆபத்தான இப்பயணத்தினை மேற்கொண்டுள்ளனர் என ஐஓஎம் தெரிவித்துள்ளது.

இப்பயணத்தில் 26 சதவிகிதம் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த ஆண்டு கேனரி தீவுகளுக்கு சுமார் 11,000 பேர் வந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 2,557 ஆக இருந்ததாக ஐஓஎம் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2020 ஆம் ஆண்டில் இந்த வழியில் 414 பேர் இறந்ததாக அறியப்படுகிறது, 2019 ல் இந்த எண்ணிக்கை 210 ஆகும்.

மேலும் புலம்பெயர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்