அல்ஸைமர் நோயினால் பாதிக்கப்பட்ட மூளையில் காத்திருக்கும் மற்றுமொரு ஆபத்து!

Report Print Givitharan Givitharan in நோய்

நினைவாற்றலை பாதிக்கக்கூடிய ஒரு கொடிய நோயாக அல்ஸைமர் நோய் காணப்படுகின்றது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது மற்றுமொரு பாரிய பிரச்சினை உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

அதாவது ஆரோக்கியமான மனிதர்களின் மூளையில் காணப்படும் பக்டீரியாக்களின் எண்ணிக்கையை விடவும் அல்ஸைமர் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் பன்மடங்கு பக்டீரியாக இருக்கும் என குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பக்டீரியாக்கள் தொடர்ச்சியான அல்ஸைமர் நோய் தாக்கத்திற்கு காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எட்டு உடல்களின் மூளையில் உள்ள பக்டீரியாக்களின் DNA தொடர்பாக ஆராய்ந்தபோது அவற்றில் ஆறு அல்ஸைமர் நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டது.

மேலும் குறித்த பக்டீரியாக்கள் தோல், வாய் மற்றும் மூக்கு பகுதிகளிலும் பரவியிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments