மனித உயிர்களை அச்சுறுத்திவரும் அரிய நுளம்பு வகை

Report Print Givitharan Givitharan in நோய்

அதிய இன நுளம்பு வகை ஒன்றிலிருந்து பரவும் வைரஸ் நோய் ஆனது உயிர்களை கொல்லும் அளவிற்கு ஆபத்து வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்கர்களை தாக்கிவரும் இந்த நோயானது பாதிக்கப்பட்ட மூன்றில் ஒருவரின் உயிரை பலியெடுக்கின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.

EEE எனப்படும் வைரஸே இந்த ஆபத்தை ஏற்படுத்துகின்றது.

உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய இந்த வைரஸினால் கால்நடைகள் அழிவை சந்திப்பதுடன், மனிதர்களில் நிரந்தர மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் திறனையும் கொண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வைரஸ் உடலினுள் சென்று ஒரு வாரத்தின் பின்னரோ அல்லது ஒரு வருடத்தின் பின்னரோ காத்திருந்து தாக்கத்தை ஏற்படுத்தவல்லது.

இந்த தாக்கமானது உடல் ரீதியானதாகவோ அல்லது உள ரீதியானதாகவோ இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அண்மையில் மாத்திரம் இவ் வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் இருவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிப்பிடத்தக்கது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்