வட்டி வீதங்களில் மாற்றங்களை ஏற்படுத்திய இலங்கை மத்திய வங்கி

Report Print Sujitha Sri in பொருளாதாரம்

மத்திய வங்கியின் நிலையான கடன் வசதிக்கான வட்டி வீதமானது குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கியின் நாணயசபையின் கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதன்போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதிக்கான வட்டி வீதம் 7 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய வங்கியின் நிலையான கடன் வசதி வட்டி வீதமானது 8 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்