எதிரிகள் தாக்க வரும்போது தனக்குத்தானே ஊதித் தன்னைப் பெரிதாக்கிக் கொள்ளும் மீன்! எங்குள்ளது தெரியுமா?

Report Print Kavitha in கல்வி

விஷ மீன் பஃபர் ஃபிஷ் (Puffer Fish). இலங்கையில் இம்மீனை ‘பேத்தையன்’ என்று அழைக்கிறார்கள்.

‘பலூன் மீன்’ என்றும் சிலர் அழைக்கிறார்கள். இம்மீனின் உடல் குட்டையாகவும், தடித்த உருளை வடிவமாகவும் இருக்கும்.

ஜப்பான் கடல் பகுதில் காணப்படும் இவ்வகை மீன்கள் நச்சுத் தன்மை கொண்டதாக உள்ளன .

இதன் மேல் உதடும், கீழ் உதடும் மற்ற மீன்கள் போல் இல்லாமல் மிகவும் கடினமாகக் கோள வடிவில் இருக்கும். அதனால் இதற்குக் கோள மீன் என்று ஒரு பெயரும் உண்டு.

எதிரிகள் தாக்க வரும்போது தம் உணவுக் குழலைக் காற்றால் நிரப்பிக்கொள்ளும். அதாவது தனக்குத்தானே ஊதித் தன்னைப் பெரிதாக்கிக் கொள்ளும். வந்த எதிரி குழம்பிப் போய் மீனைத் தேடும்.

அப்படியே சூழலுக்கு ஏற்ப மாறி எஸ்கேப் ஆகிவிடும். பலூன் மீனின் பெயரும், சேட்டையும்தான் காமெடியாக இருக்கிறதே தவிர, இவை கடுமையான விஷத்தன்மை கொண்டவை.

பஃபர் மீன்களின் உடலிலிருக்கும் பாக்டீரியாக்களில் இருந்துதான் இந்த விஷம் உருவாகிறது. செதில்களற்ற உடலின் மேல் சிறியதும், பெரியதுமாகக் காணப்படும் முட்களில்தான் விஷம் தேங்கி நிற்கும்.

உடல் முழுவதும் விஷத்தை வைத்திருக்கும் இந்த மீன்கள்.

ஜப்பானில் இந்த மீன் பிரபல உணவாக உள்ளது. இந்த மீனின் நச்சு முட்களையெல்லாம் வெட்டி எறிந்து விட்டு மசாலை போட்டுப் பொரித்து சாப்பிட்டும், சூப் வைத்தும் குடிக்கிறார்கள்.

ஜப்பானில் இந்த மீனைக் கொண்டு தயாராகும் சூப்பை ‘பூகு சூப்’ என்கின்றனர்.

இந்த மீனை வெட்டி, சமைத்துச் சாப்பிட மூன்று ஆண்டுகள் பயிற்சி தரப்படுகிறது,

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers