பிளஸ் 2 பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்

Report Print Kavitha in கல்வி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன.

கடந்த மாதம் 1-ம் திகதி தொடங்கி 19-ம் திகதி வரை நடைபெற்ற தேர்வை, சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள்.

தமிழகத்தைப் பொருத்தவரை இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வில் 91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தைத் பொருத்தவரை திருப்பூர் மாவட்டம் 95.37 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதன் பின் ஈரோடு 95.23 சதவீத தேர்ச்சியும், பெரம்பலூர் 95.15 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.

கோவை 95.01 சதவீதம், நாமக்கல் 94.97 சதவீத தேர்ச்சியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 1281 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

மேலும் தேர்வு எழுதிய கைதிகள் 45 பேரில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்னர்.

இதில் மாணவர்களைக் காட்டிலும் ( 88.57 ) மாணவிகளே (93.64 ) அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers