கள்ளத்தொடர்பு: கொதிக்கும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
2190Shares
2190Shares
Seylon Bank Promotion

என் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி எங்கள் நிம்மதியை கெடுக்காதீர்கள் என தாடி பாலாஜியின் மனைவி நித்யா கூறியுள்ளார்.

தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து வாழும் நடிகர் தாடி பாலாஜி, சமீபத்தில் தனது மனைவி மற்றும் மகள் போஷிகாவின் அறையில் தீயிட்டு கொளுத்திய வீடியோ வெளியானது.

இதுகுறித்து நித்யா கூறியதாவது, பல்வேறு ஆண்களுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது தான் அவரது வேலை. என்னையும் என் பொண்ணையும் ரூமுக்குள்ள அடைச்சு தீ வைச்சது சம்பந்தமா நான் மாதவரம் பொலிஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்க போனப்ப, அந்தப் புகாரை எடுக்க பொலிஸ் தயங்கினாங்க. ஏன்னா அவங்களுக்கு இவரைப் பத்தி தெரிஞ்சிருக்கு.

நான் எங்க கம்பிளையன்ட் கொடுக்க போனாலும் அந்த ஆளுங்களோட என்னை சம்பந்தப்படுத்தி பேசுற கீழ்த்தர புத்தி பாலாஜிக்கு உண்டு.

இப்ப பேஸ்புக்ல வலம் வர்ற வீடியோவுல நடந்தது அத்தனையும் உண்மை. அதை பார்த்த பாலாஜி ரொம்ப டென்ஷனாகிட்டார். அவரோட வக்கீல் மூலமா என்னை மிரட்ட ஆரம்பிச்சுட்டார்.

300 நாளில் உன்னை நீதிமன்றத்துக்கு அலையவெச்சு காட்டறேன்னு அவரோட வக்கீல் என்கிட்ட சேலஞ்ச பண்ணாங்க. இப்ப திடீர்னு, Mutual Divorce வாங்கிக் கொடுத்துடுறேன். ஆனால், உங்க குழந்தையை பாலாஜிகிட்ட கொடுத்துடுடணும்னு சொல்றாங்க. விவாகரத்து கேஸ் பைல் பண்ணின பிறகு ஏன் இப்படிச் சொல்றாங்க. என்னை எமோஷனலாக வீக் ஆக்கப் பார்க்கிறாங்க.

அவர் இதோட இருபதுக்கும் மேற்பட்ட ஆண்களோட என்னை சம்பந்தப்படுத்தி பேசினார். அவங்க எல்லாரும் எங்க குடும்ப நண்பர்கள். அது எப்படிங்க ஒரு பொண்ணால இருபது பேரோட தொடர்பு வைச்சுக்க முடியும். அதுவும் கணவருக்கு தெரிஞ்சு, எனக்குப் புரியலை.

அடிக்கடி என்னுடன் சேர்ந்து வாழ்வதாக கூறும் அவர், எதற்காக பல்வேறு நபர்களுடன் என்னை சேர்த்து வைத்து பேச வேண்டும். மக்களுக்க அவரோட சுயரூபம் தெரியனும்னு நினைச்சுதான் அந்த வீடியோவை வெளியிட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்