தனது மகளுக்கு அமெரிக்க நகரின் பெயரை வைத்த நடிகை

Report Print Kabilan in பொழுதுபோக்கு

அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன், தனது மூன்றாவது பெண் குழந்தைக்கு ‘சிகாகோ’ என்று பெயரிட்டுள்ளார்.

பிரபல அமெரிக்க நடிகையான கிம் கர்தாஷியன் - கென்யே வெஸ்ட் ஜோடிக்கு, கடந்த திங்கட்கிழமை வாடகைத்தாய் மூலமாக பெண் குழந்தை பிறந்தது.

இத்தம்பதிக்கு இது மூன்றாவது குழந்தை ஆகும். இந்நிலையில், இந்த குழந்தைக்கு ‘சிகாகோ’ என பெயரிட்டுள்ளதாக, கிம் கர்தாஷியன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆனால், இந்த பெயருக்கான காரணத்தை அவர் கூறவில்லை. எனினும், கர்தாஷியனின் கணவர் கென்யே வெஸ்ட், சிகாகோவில் பிறந்தவர் என்பதால் இந்த பெயரை அவர் வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த ஜோடியின் முதல் குழந்தையின் பெயர் ‘North', இரண்டாவது குழந்தையின் பெயர் ‘Saint' என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்