ஐஸ்வர்யாவின் உதட்டு முத்தமும் நெட்டிசன்களின் வருத்தமும்

Report Print Trinity in பொழுதுபோக்கு
164Shares
164Shares
ibctamil.com

நடிகை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் அவரது மகளுக்கு தந்த முத்தம் இப்போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது

சமூக வலைத்தளம் பக்கம் அதிகம் காணப்படாதவர் நடிகை ஐஸ்வர்யா ராய். அதில் எதிர்மறையான விமர்சனங்கள்தான் அதிகம் என்பது தான் காரணம்.

இறுதியாக இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை தொடங்கிய ஐஸ்வர்யா ராய் தனது கேன்ஸ் திரைப்பட விழா புகைப்படங்களை அதில் பதிவேற்றினார்.

அதில் தனது மகள் ஆராத்யாவிற்கு உதட்டோடு முத்தம் தருவது போல ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்த்தவுடன் நெட்டிசன்களில் சிலர் வருத்தப்பட்டு பல கமெண்ட்கள் பதிவிட்டுள்ளனர்.

மேற்கத்தியர்கள் போல எதற்காக குழந்தைகளுக்கு உதட்டோடு முத்தம் தரும் பழக்கத்தை ஐஸ்வர்யா செய்கிறார்.

இதை பார்க்கவே அருவெறுப்பாக உள்ளது, பல இந்திய பிரபலங்கள் இவ்வாறுதான் செய்கின்றனர் என்று ஒருவர் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.

5 அல்லது 6 வயது குழந்தைக்கு உதட்டில் முத்தம் தருவது என்ன விதமான கலாச்சாரம் என்று நளினி என்பவர் கேள்வி எழுப்பியுள்ளதோடு மட்டுமல்லாமல் இது கேவலமான விஷயம் என்றும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

மிகவும் விருப்பப்பட்டு எடுக்கப்பட்ட படத்தை இன்ஸ்டாகிராமில் போடப்போக இப்போது அதனாலேயே எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார் ஐஸ்வர்யா.

இதனால்தான் இவ்வளவு காலம் சமூக வலை தளம் பக்கம் வராமலேயே இருந்தார், இப்போது அவர் பயந்தபடியே நடந்துவிட்டது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்