நடுரோட்டில் பிக்பாஸ் நடிகைக்கு அடி உதை: ரத்த காயத்துடன் கிடந்ததால் பரபரப்பு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
345Shares
345Shares
lankasrimarket.com

பிரபல நடிகையும், இந்தி பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டவருமான நடிகை ரூபாலி கங்குலியை பைக்கில் வந்த இருவர் நடுரோட்டில் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரூபாலி மும்பையில் தனது காரில் ஐந்து வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னே சென்ற பைக் மீது அவர் கார் லேசாக மோதியது.

இதனால் ஆத்திரமடைந்த பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் நடுரோட்டில் ரூபாலியின் காரை நிறுத்தி கார் கண்ணாடியை உடைத்ததோடு அவரையும் தாக்கினர்.

இதில் ரூபாலிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து ரத்த காயத்துடன் மெதுவாக காவல்நிலையம் சென்ற ரூபாலி, இளைஞர்கள் மீது புகார் அளித்தார்.

இதனையடுத்து தலைமறைவாகியிருந்த இரண்டு இளைஞர்களை பொலிசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்