இலங்கை போரில் உயிரிழந்தவர்களுக்காக! இசையமைப்பாளர் யுவன் எடுத்த முடிவு

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

இலங்கை போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆவணப்பாடல் ஒன்றினை வெளியிட திட்டமிட்டுள்ளதாக யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்த யுவன்சங்கர் ராஜா, முதன்முறையாக "பியார் பிரேமா காதல்" என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இளன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் ஹரிஸ் கல்யாண் கதாநாயகனாகவும், ரைசா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் இப்படம் குறித்து படக்குழுவினர் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்த வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு யுவன்சங்கர் ராஜா பேட்டியளிக்கையில், இலங்கை பிரச்சனையில் உயிரிழந்த பலருக்கும் ஒரு இசை அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

என்னால் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாது. ஆனால் நடந்தவற்றை ஆவணப்படுத்த முடியும் என தெரிவித்த அவர், கடந்த 3 வருடங்களாகவே இதை பற்றி யோசித்து வருவதாகவும், விரைவில் அதனை செயல்படுத்துவேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்