பாலியல் சர்ச்சை: அவர்களின் உண்மை முகம் வெளிப்படும்..இசையமைப்பாளர் அனிருத் கருத்து

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

#MeToo விவகாரத்தில் வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களின் உண்மை முகம் வெளிப்படும் என இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.

சமீபகாலமாக சமூகவலைதளங்களில் #MeToo டேக் மூலம் தாங்கள் அனுபவித்த பாலியல் கொடுமைகள் குறித்து பலர் கூறி வருகின்றனர்.

அப்படி சின்மயி, வைரமுத்து குறித்து கூறிய பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டை கூறி அதிர வைத்தார்.

சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் தான் இதில் அதிகம் சிக்குகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பிரபல இசையமைப்பாளர் அனிருத் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், #MeToo விவகாரத்தின் வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களின் உண்மை முகம் நிச்சயம் வெளிப்படும் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers