குளியல் அறையில் வைத்து அப்பா வயது நடிகர் செய்த செயல்! பிரபல நடிகை சொன்ன அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான பிரெர்னா கண்ணா குளியல் அறையில் வைத்து அப்பா வயதுடைய நடிகர் தன்னை கட்டிப்பிடிக்க முயன்றதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

தெலுங்கு நடிகையான இவர், நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். அந்த படம் வெற்றி பெற்றதால், தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வரத் துவங்கின.

நான் இந்த துறைக்கு புதியவள், என்னை வழிநடத்த யாரும் இல்லை. அந்த சமயத்தில் ஹைதராபாத்திலிருந்து நடிகர் ஒருவர் தன்னை அழைத்தார்.

அவர் தான் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், ஒரு கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறி, சிவப்பு நிறச் சேலையில், ஈரமான முடியுடன் 5 நட்சத்திர விடுதிக்கு வரும்படி கூறினார்.

அப்போது அவர் என் அம்மாவை அழைத்துவரக் கூடாது என்று கண்டிப்புடன் கூறினார்.ஆனால் நான் என் அம்மாவை உடன் அழைத்துச் சென்றேன்.

அங்கு நாங்கள் அறையில் இருந்த போது, ஐ லைனர் இல்லாமல் முகம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும், அதனால் ஐ லனரை நீக்கும் படி கூறினார்.

நானும் உடனடியாக அங்கிருந்த கழிவறைக்கு சென்று கண்ணை துடைத்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் அந்த நடிகர் என் அம்மாவிடம் முகம் கழுவிவிட்டு வருவதாகக் கூறி, கழிவறை உள்ளே வந்து திடீரென்று என்னைத் தள்ளி கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நான் உடனடியாக அவரை பின்னால் தள்ளிவிட்டேன். இந்த சம்பவம் எல்லாம் ஒரு சில விநாடிகளில் நடந்து முடிந்து விட்டது. பின்னர் அவர் என்னை மிரட்டினார்.

எனது அப்பா வயதுள்ள ஒருவர் இப்படி நடந்து கொண்டது மிகவும் கவலையாக இருந்தது. அவருக்கும் ஒரு மகள் இருக்கிறாள் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

திரையுலகில் பெண்கள் இணக்கமாகப் போவதால்தான் பெரிய படங்களில் பணியாற்றுகின்றனர் என்று சிலர் கூறுகின்றனர். இந்த மனப்போக்கை ஊக்குவிக்க முடியாது.

இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் தற்போது பாலியல் கொடுமைகளுக்கு எதிராக நிற்கின்றனர். ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட கொடுமையை வெளியில் சொல்வதற்கு முன்னர் பல முறை யோசிப்பாள்.

அதைப் பற்றி வெளியில் சொல்லும்போது அவளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மீ டூ இயக்கம் ஒவ்வொரு பாலினத்தவரும் தங்களை அதிகாரம், பணம், செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் பாலியல் கொடுமைக்கு ஆளாக்குபவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள உருவாகியுள்ளது.

ஆண்களும், ஓரின சேர்க்கை சமூகத்தினரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பேச முன்வர வேண்டும். மீ டூ இயக்கம் பெண்களுக்கானது மட்டுமல்ல ஒவ்வொரு தனிமனிதருக்குமானது என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers