குடிபோதையில் மோசமாக நடந்து கொண்ட பிரபல நடிகர் விமல்... பரபரப்பு புகார்... சிசிடிவி கமெராவில் சிக்கபோவது என்ன?

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

குடிபோதையில் நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் தெலுங்கு நடிகர் அபிஷேக்கை, நடிகர் விமல் குடிபோதையில் அடித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விருகம்பாக்கம் பொலிசில் அபிஷேக் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் விமல் உட்பட 4 பேர் மீது பொலிசார் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கமெரா பதிவுகளை பொலிசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதில் சம்பவ இடத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers