கணவரை விடுத்து வேறு ஒருவருடன் தொடர்பு.. நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர்! அதிர வைக்கும் சின்மயி-ன் ட்வீட்டுகள்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

கணவனுடன் பிரச்சனை என்றால் வேறொருவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளலாம் என்று மனநல மருத்துவர் ஒரு பெண்ணிடம் கூறியதை, பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் அளித்தார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தன. அப்போது முதல் தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்கள் சம்பவங்களை பதிவிடுகிறார்.

இந்நிலையில், பெண்ணொருவர் சின்மயிக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நான் சமீபத்தில் மனநல மருத்துவரை சந்தித்தேன். என்னிடம் தனிப்பட்ட விடயங்களை கேட்டார். யாரிடமும் கூற மாட்டேன் என்று கூறவே, அவரை நம்பி அந்தரங்க விடயங்களை கூறினேன்.

இதுவும் சிகிச்சையின் ஒரு அங்கம் தான் என்றார். கடைசியில் ஆலோசனை கூறுவது போல பேசிய அவர், உங்களின் கணவரை விட்டு விட்டு வேறு யாருடனாவது தொடர்பு வைத்துக்கொண்டால், நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள் என்று கூறினார்.

இதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்ற மருத்துவர்கள் இருப்பது மருத்துவ துறைக்கே களங்கம் என்று தெரிவித்துள்ளார். இதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் Screenshot எடுத்து பகிர்ந்துள்ளார். அத்துடன், இதுபோன்ற மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று கேள்வி கேட்டுள்ளார்.

இதேபோல் நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர் ஒருவருக்கு, ‘Nude' என்ற அழகுசாதன நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களின் புகைப்படங்களை பதிவு செய்து, இவை எல்லாம் என்னுடைய favourite nude என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்