என் மகளை பற்றி சொல்ல முடியாது! பிக்பாஸ் வீட்டுக்குள் புகுந்த பொலிசாரிடம் திமிராக பேசிய வனிதா

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வனிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக உள்ளே பொலிசார் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போட்டு கொண்டு ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் வனிதா.

இந்நிலையில் ஹைதராபாத்துக்கு வந்த வனிதா தனது மகள் ஜெனிதாவை கடத்தி வைத்துள்ளார் என அவரின் இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ் தெலுங்கானா பொலிசில் புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து அவரிடம் விசாரிக்க ஆந்திர பொலிசார் முன்னர் சென்னை வந்த போது வனிதா தலைமறைவானார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் அவர் இருப்பதை அறிந்த தெலங்கானா பொலிசார், தமிழகக் காவல்துறையின் உதவியை நாடியுள்ளது.

நசரத்பேட்டை காவல்துறை உதவியுடன் தெலுங்கானா காவலர்கள், வனிதா விஜய்குமாரிடம் விசாரணை நடத்த பூந்தமல்லியில் ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ள பிக் பாஸ் அரங்கத்துக்குள் சென்றார்கள்.

அங்கு அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது, அப்போது கடத்தப்பட்டதாக சொல்லப்படும் ஜெனிதா, எங்கு உள்ளார் என்பதை வனிதா பொலிசாரிடம் சொல்ல மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து மாலை 5 மணிக்கு வனிதா மகளை நேரில் அழைத்து பொலிசார் விசாரிக்கவுள்ளனர், அப்போது மகள் தாயுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா? அல்லது தந்தையுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா? என்பதை பொறுத்தே வனிதாவின் கைது குறித்து முடிவு செய்யப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...