இலங்கை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட தமிழர்: எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நெகிழ்ச்சி செயல்

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

குண்டுவெடிப்பு தாக்குதலில் பார்வை இலங்கை தமிழருக்கு, பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேரில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உலககெங்கிலும் உள்ள இசைத்துறையில் நன்கு அறியப்பட்ட ஒரு பிரபலமான பாடகர் ஆவார். எண்ணற்ற ரசிகர்களை அவரது குரல்வளமும், பாடிய பாடல்களும் கவர்ந்துள்ளன.

அப்படி அவரது இசையில் மயங்கிய இலங்கையை சேர்ந்த மாறன் என்பவர், குண்டு வெடிப்பு தாக்குதலில் தன்னுடைய பார்வை திறனை இழந்துள்ளார்.

அந்த சமயத்தில் அவருக்கு பெரும் ஆறுதலாக பாலசுப்ரமணியத்தின் பாடல்களே இருந்துள்ளன. இதுகுறித்து சமூக வலைதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள மாறன், எஸ்பிபியையும் அவரது குரலின் மந்திரத்தை பற்றியும் புகழ்ந்து பேசியுள்ளார்.

எதிரில் இருந்த நபர் பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களில் பிடித்த பாடலை பாடுமாறு கேட்டார். உடனே மாறன்,"மனைவி ஒரு மந்திரி" படத்தில் இடம்பெற்ற 'சின்ன புறா ஒன்று' என்கிற பாடலை பாட ஆரம்பித்தார்.

திரைமறைவில் இதனை கேட்டுக்கொண்டிருந்த பாலசுப்ரமணியம், அவர் பாடி கொண்டிருக்கும் போதே ஆச்சர்யம் அளிக்கும் வகையில், அந்த பாடலின் மீதியை பாட ஆரம்பித்தார்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்