நடிகை மதுமிதாவின் கையில் 12-க்கும் மேற்பட்ட கத்தி கீறல்... நான் செய்த தவறு: கணவர் ஜோஸல் வேதனை

Report Print Santhan in பொழுதுபோக்கு

நடிகை மதுமிதாவின் கணவர், என் மனைவி பிக்பாஸிற்கு சென்றதே மிகப் பெரிய தவறு என்பதை இப்போது தான் உணர்ந்திருக்கிறோம் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே நுழைந்தவர் தான் நடிகை மதுமிதா.

ஆரம்பத்தில் இவர் தமிழ் பொண்ணு.. தமிழ் பொண்ணு என்று கூறியதைக் கேட்டு மக்கள் வெறுப்படைந்தாலும், வாரங்கள் செல்ல, செல்ல மதுமிதாவின் உண்மை முகம் மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதால், அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் சமூகவலைத்தளங்களில் கூடியது.

இப்படி போட்டியின் வெற்றியாளர் என்று கணிக்கப்பட்ட மதுமிதா திடீரென்று தற்கொலைக்கு முயன்றுவிட்டதாக கூறி, திடீரென்று போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது இன்று வரை சரியாக காட்டவில்லை, சொல்லவும் இல்லை.

மதுமிதாவும், இதைப் பற்றி முழுமையாக சொல்லாமல் இருக்கிறார்.

இந்நிலையில் தான் மதுமிதாவின் கணவர் ஜோயல் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் மனைவி நடந்த சம்பவம் குறித்து கூறுகையில், நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து தான் முடிவு எடுத்தோம்.

அங்கு காதல், சண்டை, கொஞ்சுவது இருந்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறேன், மதுமிதா கொஞ்சம் கோபப்படுவாள், அவ்வளவு தான், மதுமிதா கத்தியால் அறுத்து கொண்ட தினத்தன்று, நள்ளிரவில் எனக்கு ஒரு போன் வருகிறது.

அதில், உங்கள் மனைவியை உடனே அழைத்து செல்லுங்கள் என்கின்றனர். இதனால் உடனடியாக நான் அங்கு சென்று பார்த்த போது, அவள் கையில், 12 முறை கத்தியால் கட்டுப்போட்டிருந்தது.

ஒரு சாதரண விளையாட்டு நிகழ்ச்சி தான் என்று அனுப்பினேன், ஆனால் இது இப்படி ஆகிவிட்டது. குறிப்பாக இந்த நிகழ்ச்சி நாங்கள் ஸ்கிரிப்ட் இல்லை என்று நினைத்தோம், ஆனால் அவர்கள் பெர்பார்மன்ஸ் சரியில்லை என்று கூறினார்கள் பாருங்க, அப்போது தான் உண்மை தெரிந்தது, நாங்கள் மிகப் பெரிய தவறு செய்துவிட்டோம் என்பது புரிந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...