பிரபல நடிகர் சசிகுமார் மற்றும் குழுவினரால் மருத்துவமனை நோயாளிகளுக்கு ஏற்பட்ட அவதி... வெடித்தது சர்ச்சை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

நடிகர் சசிகுமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பால் அரசு மருத்துவமனை நோயாளிகள் அவதி அடைந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் பல இடங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு, தேனி அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மருத்துவமனை தான் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில், தமிழக அளவில் கவனம் பெற்றுள்ளது.

இதன் காரணமாக இந்த பகுதியில் சிபிஐ பொலிசார் அதிகளவு இருந்தனர்.

இங்கு நேற்று படப்பிடிப்பு நடந்த போது 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அங்கும் இங்குமாக சைரன் சத்ததுடன் சென்றுகொண்டிருந்தன. அதனை பின்தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. இதனைக் கண்ட சி.பி.சி.ஐ.டி பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.

மருத்துவமனை உள்நோயாளிகள் அனைவரும், இந்த சத்ததால் பெரும் அவதியுற்றனர்.

சசிகுமார் படத்தின் படப்பிடிப்புக்கு மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையாக அனுமதி வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

உடனே, அங்கிருந்த பொதுமக்கள், ஆம்புலன்ஸ்களை மறித்து படக்குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த உள்ளூர் பொலிசார் அங்கு வந்து ஆம்புலன்ஸ் ஓட்டுனரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

ஆனால் அதற்குள் படக்குழு அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்