பிரபல நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிராக எழுந்தது புதிய சர்ச்சை

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு
174Shares

விளம்பர படமொன்றில் இரட்டை வேடத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதிக்கு எதிராக வணிகர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனமொன்று, ஆப்ஸ்கான விளம்பரத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளது, இதில் விஜய் சேதுபதி கஸ்டமராகவும் கடைக்காரராகவும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

இதற்கு சில்லறை வணிகர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சிறு குறு வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பணம் வாங்கிக் கொண்டு துணை போகும் நடிகர் விஜய் சேதுபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட உள்ளோம். நவம்பர் 04-ம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள விஜய் சேதுபதி அலுவலத்தை கொளத்தூர் த.ரவி தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்' என்று அறிவித்துள்ளனர்.

மேலும் ஏழை, விவசாய மக்களுக்கு ஆதரவாக பேசி விட்டு இப்படியா செய்வது? அது வெறும் நடிப்பா, உங்களது படத்தையும் ஓன்லைனில் பார்ப்போம் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்