தனது உதவியாளரின் இல்லத் திருமண விழாவை முன்னின்று நடத்திய அஜித்!

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

நடிகர் அஜித்தின் உதவியாளர் சுரேஷ் சந்திரா இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

தமிழ் திரைத்துறையில் மிகவும் வித்தியாசமான நபர் என்றால் நடிகர் அஜித் என்றே சொல்லலாம். பொதுவாக கேளிக்கை மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதவராகவே காணப்படும் அஜித், துக்க காரியங்களில் தவறாமல் கலந்து கொள்ளும் இயல்புடையவர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது படப்பிடிப்பிறக்காக வெளிநாட்டில் இருந்த அஜித், அடுத்த சில நாட்களில் சென்னை திரும்பியதும், விமான நிலையத்தில் இருந்து நேரடியாகவே ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

சில நேரங்களில் பொது மக்களுக்கு போக்குவரத்து இடைஞ்சலை ஏற்படுத்தும் என்பதாலே அஜித் பெரும்பாலான நிகழ்ச்சிகளை தவிர்த்துவிடுவார்.

ஆனால் இன்று தனது உதவியாளர் சுரேஷ் சந்திரா தங்கை மகள் திருமண விழாவில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மட்டுமின்றி குடும்பத்தில் ஒருவராக அந்த விழாவினை முன்னின்று நடத்தியும் வைத்துள்ளார்.

அஜித் பங்குபெற்ற நிகழ்ச்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்