இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் அம்மா! வனிதா திருமணத்துக்கு பின்னர் உணர்ச்சிபூர்வமான அவர் மகளின் பதிவு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

நடிகை வனிதா விஜயகுமார்,பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக அண்மையில் திருமணம் செய்து கொண்ட நிலையில் அது குறித்து வனிதா மகள் உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.

பிரபல நடிகை வனிதாவுக்கும், பீட்டருக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் வனிதாவின் இரண்டு மகள்களும் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் வனிதாவின் மகள் ஜோவிகா எமோஷ்னலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜோவிகா கூறியிருப்பதாவது, உங்களை நினைத்தால் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

அப்பாவை இந்த குடும்பத்திற்கு வரவேற்பதில் நான் மிகவும் சந்தோஷமடைகிறேன். இப்போது தான் இது முழுமையடைகிறது. ஒருநாள் உங்களை போல நண்பர்கள் எனக்கு கிடைப்பார்கள்.

பலர் பல விடயங்களை சொல்லட்டும், ஆனால் நினைவில் வைத்து கொள்ளுங்கள், இது நம் வாழ்க்கை, நாம் இதை வாழ போகிறோம். நமது வாழ்க்கை காதலால் நிறைந்து இருக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்