அடையாளம் கண்டுகொண்ட S.P.B! சைகை மூலம் கேட்ட கேள்வி... ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கை தந்த தகவல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
4020Shares

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தன் மகனை நேற்று அடையாளம் கண்டு, சைகை காட்டி நலம் விசாரித்துள்ளார்.

இந்த தகவல் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5-ம் திகதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் திகதி மோசமடைந்தது.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. எஸ்.பி.பி.யின் மகன் சரணும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை பற்றிய தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

அதன்படி நெற்று காலை எஸ்.பி.பிக்கு கொரோனா நெகடிவ் என்று எஸ்பிபி சரண் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே, வீடியோ மூலமாக அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இதன் பின்னர் மீண்டும் சரண் வெளியிட்ட வீடியோவில், என் தந்தையின் உடல் நிலை சீராக உள்ளது, நினைவுடன் உள்ளார். என்னை அடையாளம் கண்டுகொண்டார்.

நீங்கள் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என, அவரிடம் தெரிவித்தேன். என்னையும், என் தாயின் உடல் நலத்தையும், சைகை காட்டி கேட்டறிந்தார் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்