பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி மரணம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி காலமானார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் வடிவேலு பாலாஜி (42)

இவர் பந்தயம், யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா, சுட்டபழம் சுடாத பழம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

இவரின் நகைச்சுவை திறமைக்கு என பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

இந்த நிலையில் சுமார் 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய கை, கால்களும் செயல் இழந்தது. இதனிடையே போதிய பண வசதி இல்லாத காரணத்தால், அவரை அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். உயிரிழந்த வடிவேலு பாலாஜிக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.

அவரின் திடீர் மறைவு சக நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்